TNTA கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா 03-03-2019
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பி கே இளமாறன் அவர்கள் எழுதி , நடித்துள்ள கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. விழாவில் அறம் பட இயக்குனர் கோபி நாயினார், சிறைத் துறை டி.ஐ.ஜி முருகேசன், மற்றும் பல கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். வலி தாங்கும் கல்லே சிலையாகும் என்ற கருத்தை மாணவர்களுக்கும் , மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு உளவியல் ரீதியான காரணம் என்ன என்று கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்ற நல்ல கருத்தை ஆசிரியர்களுக்கும் முன் வைக்கும் அருமையான குறும்படம் இது. உருவாக்கிய குறும்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். -பிரியசகி
Comments
Post a Comment